Breaking News

பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.24-

ஈரோடு மாவட்டத்தில் 22/01/2022 அன்று   பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு வெளியில்,  ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இதில்  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பு  படித்து வந்த மாணவி லாவண்யா   கட்டாய மதமாற்றத்திற்கு தூண்டி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்தும், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இந்த ஆர்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments