Breaking News

அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் சிறப்பு முகாம்

சென்னிமலை:

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் சிறப்பு முகாம் சென்னிமலையில் நடைபெற்றது. 

சென்னிமலை  கௌரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் சிறப்பு முகாமை நடைபெற்றது. 

இதை தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்  தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி,  ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் சென்னிமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் ,  சென்னிமலை ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ,  சென்னிமலை பேரூர் கழக செயலாளர்  எஸ்.எம்.ராமசாமி,  திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர்  இராமகிருஷ்ணன்,   துறை சார்ந்த அதிகாரிகள், மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பலர்   கலந்து கொண்டனர்.‌






No comments

Thank you for your comments