Breaking News

குன்றத்தூரில் 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் அமைச்சர் தா.மோ அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் துணிப்பை மற்றும் முழு கரும்பு சேர்த்து 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆத்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வ பெருந்தகை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (காஞ்சிபுரம் மண்டலம்) லட்சுமி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





No comments

Thank you for your comments