காட்டன் சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
1 ) சைக்கிள் கடை, சாலியர் தெரு, காஞ்சிபுரம்,
2 ) மொட்டைகுளம் அருகில், வேகவதி தெரு, காஞ்சிபுரம் மற்றும்
3 ) காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பின்புறம் உள்ள பெட்டிகடை ஆகிய இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்களான
1 ) சீனுஷா ( 55 ), த / பெ.மணிஷா, பாவாஜி தெரு, காஞ்சிபுரம்,
2 ) நாகராஜ் (44) த / பெ.காத்தவராயன், இந்திரா தெரு, பல்லவன் நகர், காஞ்சிபுரம் மற்றும்
3 ) மனோகரன் ( 50 ), த / பெ.ஆறுமுகம், வேகவதி தெரு, காஞ்சிபுரம் ஆகிய மூவரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு, காட்டன் பெட்டிங் கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
No comments
Thank you for your comments