Breaking News

பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் குளறுபடி... பஞ்சாப் பேரணி ரத்து...

சண்டிகர், ஜன.6-

பிரதமர் மோடி தனது பஞ்சாப் பேரணி மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களை ரத்து செய்துவிட்டு திரும்பினார். பிரதமரின் பார்வையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை எழுப்பி இருந்த காரணத்தினால் ஃபிளைஓவரின் மீது கார் முன்னேறிச் செல்ல முடியாமல் நின்றது.

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை எழுப்ப முடிந்தது. இது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோன்றிய குறைபாடுகளைக் காட்டுகிறது இது தொடர்பாக ஆய்வு செய்து யார் இந்த குறைபாட்டுக்கு காரணம் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசுக்கு அவசரத் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் இருந்து பதிண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் பெரோஸ்பூர் சென்று பேரணியில் கலந்து கொள்ள திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

ஹுசைனி வாலா என்ற இடத்தில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு அரங்கத்திற்கு பிரதமர் சென்று மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தேசிய தியாகிகள் நினைவு அரங்கத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மேகமூட்டம். பருவநிலை சரியாக இல்லை. அதனால் பிரதமர் 20 நிமிடம் காத்திருந்தார். மேக மூட்டம் கலையவில்லை. அதனால் காரில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த மாற்று ஏற்பாடு குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநில காவல் துறைத் தலைவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஹுசைனி வாலா என்ற இடத்தில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு அரங்கத்திற்கு பிரதமர் நேரே காரில் செல்ல முடிவு முடிவு செய்யப்பட்டது.

கார் பயணத்துக்கு 2 மணி நேரம் ஆகும் என்று  கணக்கிடப்பட்டது.

பிரதமர் காரில் புறப்பட்டார். ஹுசைனி வாலா என்ற இடத்தில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு அரங்கத்திற்கு 30 கிமீ இருக்கும் பொழுது ஃபிளை ஓவர் ஒன்றின் மேல் பிரதமர் கார் சென்று கொண்டிருந்தபொழுது மேலும் செல்ல முடியாமல் சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததை கண்டனர்.

பிரதமரின் பஞ்சாப் வருகைக்கு எதிராக போராடுகிறார். விவசாயிகள் அமைப்புகள் சாலையில் தடங்கல்களை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அதனால் பேருந்துகளும் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப் பட்டிருந்தன அவற்றை ஒருமுகப்படுத்த போலீசாரால் முடியயவில்லை. 15 முதல் 20 நிமிடங்கள் பிரதமரின் கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

அதன் பிறகு பஞ்சாப் அணியை ரத்து செய்துவிட்டு பிரதமர் டெல்லி திரும்பிவிட்டார்.

மேலும் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைகள் திடீரென்று ஏற்படுவது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் தவறு நிகழ்ந்திருப்பதை காட்டுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது.

இந்தத் தவறுக்கு யார் காரணம் என்று கண்டறியும் பணியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா சாலையில் ஏற்பட்டிருக்கிற தடைகளை அகற்ற உத்தரவிட கோரி மாநில முதல்வரிடம் பேசுவதற்காக நான் முயற்சித்தேன் ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஃபிளைஓவரில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அகற்ற போலீசார் உதவி செய்யவில்லை. தடைகளை ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாக தோன்றுகிறது என்று ட்விட்டரில் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Thank you for your comments