Breaking News

தொ.வே. கூட்டுறவு வங்கியின் நியாவிலை கடையில் பொங்கல் தொகுப்பினை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ...

காஞ்சிபுரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். 

இதனையடுத்து,  காஞ்சிபுரத்தில் காஞ்சிபுர சட்டமன்ற உறுப்பினர் சி. பி .எம் .பி எழில்ரசன் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளியூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் நியாவிலை கடையில் முழு கரும்புடன் கூடிய 21 பரிசுடன் கூடிய பொங்கல் தொகுப்பினை சட்டமன்ற உறுப்பினர்  எழிலரசன் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பூபாலன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்  வேதாச்சலம்,ஒன்றிய குழு உறுப்பினர் வேண்டாமிர்தம், உலகநாதன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஜெயராமன், துணைத் தலைவர் சிவகாமிஜோதி, துணை செயலாளர் அ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







No comments

Thank you for your comments