Breaking News

வாலாஜாபாத் ஒன்றியத்தில் பொங்கள் பரிசு தொகுப்பு வழங்கல்...

காஞ்சிபுரம்: 

தமிழர்கள் கொண்டாடும் நாளாம் தைத்திருநாள் பொங்கல் அந்தப் பொங்கலை ஏழை எளிய மக்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாட்டில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிவருகிறது.

அப்படி வழங்கிவரும் தொகுப்பில் பொருட்களின் தரம் குறைவு எனவும் எடையின் அளவு குறைவு எனவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழக முதல்வர் நேரடியாக நியாயவிலை கடைகளுக்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டு பொருட்களை வழங்கினார். 

அந்த வகையில் இன்று வாலாஜாபாத் ஒன்றியம் சேக்காங்குளம்  கிராமத்தில் தலைவர் சுபத்ரா மோகன் அவர்கள் பொருட்களின் தரங்களை ஆராய்ந்து அந்தத் தொகுப்பில் அரிசி சர்க்கரை பருப்பு வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் கரும்பு போன்ற பொருட்கள் சரியான முறையில் உள்ளனவா என சரிபார்த்து அந்தப் பகுதியில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன் கிளைக் கழகச் செயலாளர் மாசிலாமணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேக்காங்குளம் நித்திலம் வெங்கடேசன் பிரகாஷ் மற்றும் ஊர் பெரியவர்கள் சக்திவேல் ராதாகிருஷ்ணன் பச்சையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தரம் பார்த்து எடை பார்த்து பொருட்கள் வழங்கியதற்கு ஊர்த்தலைவர் சுபத்ரா மோகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments