Breaking News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை தொடங்குகிறது சட்டசபை கூட்டத்தொடர்.... கேள்வி கேட்க தயராகும் அதிமுக

சென்னை:   

தமிழகத்தில் 2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளட்ட பிரச்சனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை தொடுக்க தயாராகி வருவதால் சட்டசபையில் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.

தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர்  உரையுடன் நாளை தொடங்குகிறது.  இந்த கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள 3-வது மாடியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

அவரை சபை மரபுபடி சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிப்பார்கள்.

சபாநாயகர் இருக்கைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்த பிறகு மற்ற உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமர்வார்கள். ஆளுநர் இருக்கை அருகே சபாநாயகர் அமர்வார்.

சரியாக 10 மணி ஆனதும் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது அவையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முடிந்ததும் ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒன்றரை மணிநேரம் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் இடம் பெறும்.

பின்னர் அந்த உரையை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். அதன் பின்னர் நாட்டுப்பண் பாடப்படும். அப்போது அவை உறுப்பினர் அனைவரும் எழுந்து நிற்பார்கள். நாட்டுப்பண் முடிந்ததும் அதோடு அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

மரபுபடி ஆளுநர் எப்படி அழைத்து வரப்பட்டரோ, அதே அணி வகுப்பின்படி அவர் வழியனுப்பி வைக்கப்படுவார். சட்டசபையை விட்டு ஆளுநர் வெளியே செல்லும்வரை அவை உறுப்பினர்கள் நிற்பார்கள்.

பின்னர் சபாநாயகர் அப்பாவுவின் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்னென்ன அலுவல்களை மேற்கொள்வது என்பது பற்றி அதில் முடிவு செய்யப்படும்.

இந்த கூட்டத்தொடர் அனேகமாக 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.

தி.மு.க. ஆட்சியில் இதுவரை செய்துள்ள சாதனைகள், திட்டங்களை விளக்கி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். 

இதேபோல் எதிர்க்கட்சியினர், திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. மேலும் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 

வடகிழக்கு பருவமழையால் விளைந்த பயிர்கள் சேதமடைந்த நிலையில், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. 

மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது எதிர்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக அரசு திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.  தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முக்கியமான வாக்குறுதிகளை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்விக்கணை தொடுப்பார்கள்

இதனால் சட்டசபையில் விவாதம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், இந்த கூட்டத்தொடரில் திமுக அரசு சில முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கும் கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் அறந்தாங்கி எம்எல்எ ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்காண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில். ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடத்த அரசு தயராகி வந்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாலும், அரசு அந்த முயற்சியை கைவிட்டு மீண்டும் கலைவாணர் அரங்கத்திற்கே சட்டசபை கூட்டத்தை மாற்றியுள்ளது

நாளை தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்குப் பிறகு அலுவல் ஆலோசனைக் குழு கூடி கூட்டத்தொடர் நடைபெறும் காலம் குறித்து முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடர் சில காலம் நீடிக்கும் என்றும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இறுதிநாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசுவார்.

No comments

Thank you for your comments