சிங்க பெருமாள் ஆலயத்தில் நம்மாழ்வார் திருவடி தொழுதல்
காஞ்சிபுரம், ஜன.28-
காஞ்சிபுரம் ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் ஆலயத்தில் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை எனும் ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் ஆலயத்தில் தை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் வேத விற்பனர்கள் மூலம் பிரபந்தங்கள் மற்றும் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பாடப்பட்டு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருக்கு சிறப்பு நெய்வேத்தியம் பூஜைகள் தீபாராதனை நடைபெற்று நம்மாழ்வாருக்கு புஷ்பங்கள் மற்றும் வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கைத்தாங்கலாக பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்தமான துளசி சாத்தப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நம்மாழ்வார் எழுந்தருளி சடகோபன் எனும் சடாரியாக சேவை சாதித்து வருகிறார்.
தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் தலைமையில் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் சடாரி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments