Breaking News

மின்னொளி கபடி போட்டி... பரிசு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார் விஜய் வசந்த்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையடியில் சந்தையடி 64 வது படிப்பக ஆண்டு விழா மற்றும் 55 வது ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபடி போட்டியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த விஜய் வசந்த் அவர்களுக்கு விழா குழு சார்பில் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற அழகப்பபுரம் அணிக்கும், 2 வது இடம் பிடித்த பெருமாள்புரம் அணிக்கும்  கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  பரிசு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கி பாராட்டி பேசினார். 

முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார தலைவர் முருகேசன், ஆகஸ்தீஸ்வரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிங்ஸ்லின், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் அரிகிருஷ்ண பெருமாள் மற்றும் சேகர், டாக்டர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments