புற்றுநோய் பரவும் அபாயம்... தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்த பெண்கள்...
கன்னியாகுமரி :
புற்றுநோய் பரவும் அபாயம் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பெண்களால் பெரும் பரபரப்பு போலீசார் பேச்சுவார்த்தை...
குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்துக்குட்பட்ட நுள்ளிவிளை பஞ்சாயத்தில் உள்ள மடவிளாகம் கிராமத்தில் பஞ்சாயத்து அனுமதி வாங்காமல் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய நெட்வொர்க் வேகத்தை அதிகப்படுத்த குடியிருப்பு பகுதியினுள் அதன் டவரை அமைக்கும் பணியை இரவோடு இரவாக மேற்கொண்டு வந்தது.
காலையில் டவர் பணி நடைபெறுவதைப் பார்த்த பொதுமக்கள் அதை உடனடியாக நிறுத்துமாறும் கூறியும் பணி தொடர்ந்து நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்
போராட்டத்தில் பங்கெடுத்து போராட்டத்தை முன்னின்று நடத்தி சென்ற பிரியா சதீஷ், கூறுகையில்,
இப்பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இந்த செல்போன் டவர் இங்கு அமைவதால் இப்பகுதி முழுவதும் கதிர்வீச்சு அதிகரித்து புற்றுநோய் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு, குழந்தைகளுக்கு பெயர் சொல்ல முடியாத அளவிலான புதிய நோய்கள், உருவாகும் ஆபத்து இருப்பதாலும் அதேபோல் இந்த செல்போன் டவர் அமைவதால் பறவை இனங்கள் அழிந்துவிடும் எனவும் குறிப்பாக சிட்டுக்குருவி இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் மரம் செடி கொடிகள் கூட அழிந்துவிடும் மரங்கள் அதன் பலனைக் கொடுக்காது.
எனவே இந்த செல்போன் டவரை இங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைத்துக் கொள்ளுங்கள் மாறாக குடியிருப்பு பகுதியில் அமைத்து எங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து விடாதீர்கள் அவ்வாறு செய்தால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது .
No comments
Thank you for your comments