ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்திற்கு வருகை புரிந்த வேலூர் இப்ராஹிம்
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்திற்கு பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வருகைபுரிந்தார்.
தமிழகத்தில் மத நல்லிணக்கம் ஹிந்து இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தி நிலவேம்பு சித்தர் விஷ்வ பிரம்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமி நடத்திய சர்வசமய வழிபாட்டிற்கு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இணைந்து கூட்டு வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தும் அந்நிய சக்திகளை முறியடிக்கவும் தேச ஒற்றுமையை காக்கவும் மற்றும் பல்வேறு ஆலோசனைகள் இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
விஸ்வகர்மா சமுதாய மக்கள் கோரிக்கைகளை பாரத பிரதமருக்கு தெரிவிக்குமாறு பாபுஜி சாமி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமிடம் கோரிக்கைகள் அடங்கிய தொகுப்புகளை கொடுத்தார்.
தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தினமும் 600 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி மாதா ஜி, கேபிள் முருகன், திருக்குமார், வாஞ்சிநாதன், தங்கதுரை, பாக்கியலட்சுமி, கவிதா மற்றும் பல்வேறு முக்கிய நபர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments