Breaking News

கையூட்டு பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் சஸ்பெண்ட்!

கோவை, ஜன.14-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி  மீன்கரை ரோடு, இரட்டை கண் பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன் மற்றும் தலைமை காவலர் சரவணன்(1389) ஆகிய இருவரும் அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் மற்றும் மாடு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களிடமிருந்து லஞ்சமாக பணம் வாங்கியுள்ளார்கள். இதனை அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்   இருவரையும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக  தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.


No comments

Thank you for your comments