கோவையில் திமுகவில் ஐக்கியமான அதிகமுவினர்...
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடக்கு தொகுதி, மணியகாரன்பாளையம் பகுதி கழகத்தின், 25 வது வார்டுக்கு உட்பட்ட, அதிமுக துணைச் செயலாளர் மதிவாணன், பகுதி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஹரிஹரசுதன், பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பொருளாளர் சந்தோஷ், ஐடி விங் இணைச் செயலாளர்கள் தீனா, ஹரீஷ், மாணவர் அணி துணைச் செயலாளர் முரளி மற்றும்
25 வது வார்டு அமமுக துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி, பகுதி கழகப் பொறுப்பாளர் அஞ்சுகம் பழனியப்பன் ஏற்பாட்டில், கழக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வட்ட கழகப் பொறுப்பாளர்கள் தாமோதரன், புகழேந்தி, மரியராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments