Breaking News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பஞ்சாபில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து வேலூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட பாஜக பட்டியலின சார்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட அவமரியாதையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியலின தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். தமிழ் மாநில செயலாளர் கார்த்தியாயிணி, வேலூர் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் ஜெகன் கே.கே.சக்கரவர்த்தி பி.தமிழ்அழகன் மற்றும் பலர் பாரதப் பிரதமர் மோடியை அவமரியாதை செய்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளக்க உரையாற்றினார் இதில் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் பேசுகையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசானது பாரத பிரதமரின் பாதுகாப்பு பணியில் விளைவித்த இடையூறுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை வெளியில் விடக்கூடாது என்று இதுநாள் வரை பாஜக வலியுறுத்தி வருகிறது.

இது ஏனென்றால் ஒரு பிரதமருக்கு இந்த நிலை என்றால் விடுதலைப்புலிகளின் ஊடுருவலையும் தலைவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உம் பாரதிய ஜனதா இது போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறது விவசாயிகள் போர்வையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பிரதமர் மோடியை சுட்டுவிட திட்டமிட்டுள்ளனர். இது தெரிந்ததும் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பாதியிலேயே தலைநகர் திரும்பி சென்றுள்ளார்.

 இப்படி காங்கிரஸ் அரசு பஞ்சாபில் செய்துவிட்டு பிரதமர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் கலந்து கொள்ளவில்லை இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்து தனக்கு கொண்டுவந்துள்ளது அதனால் கூட்டத்திற்கு வரவில்லை என்று பதிலளித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் இது ஏற்புடையதாக அல்ல மாறாக அவர் தப்பித்துக்கொள்ள சில பல கதைகளை கட்ட வைத்து விட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாரத பிரதமர் என்ற ஒரு பதவியில் இருப்பவருக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் வேறு யாருக்கு பாதுகாப்பு தரப்போகிறது பஞ்சாப் மாநில அரசு என்பதை காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் முடியவில்லை என்றால் இத்தாலிக்குச் சென்று விடலாம் ராகுல் காந்தி குடும்பத்தினர் அதைவிடுத்து நீங்களும் அரசியல் நடத்துகிறோம் என்று முதல்வரின் உயிருக்கு குறி வைப்பது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் திமுக அரசு மத்திய அரசை மதிக்காமல் மோடி தமிழகத்திற்கு வரும்போது கோ பேக் மோடி என்று சொல்லி தனது டுவிட்டர் மற்றும் இணையதளம் பக்கங்களில் பதிவிட்டு ஒரு பெரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கை இரவு பத்து மணி வரைக்கும் நடத்தலாம் கடை திறந்திருக்கும் ஆனால் கோயில்களை மூடிவிடவேண்டும் இதுதான் திமுக கண்டுள்ள புதிய உத்தி நாட்டில் உள்ள மக்களை குடிமகன்களாக ஆக்கிவிட்டு அவர்களுடைய பணத்தை அவருடைய இரத்தத்தை வியர்வையை உறிஞ்சும் இதிலேயே திமுக அரசு குறியாக உள்ளது இப்படி பல கதைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம் வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை வெள்ளையப்பன் டாக்டர் அரவிந்த் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு விட்ட நிலையிலும் தொடர்ந்த பாஜக தனது கட்சி பணியை வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஆற்றி வருகிறது எந்தக் கொம்பனுக்கும் அசராமல் தொடர்ந்து பாஜக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது 

போராட்டங்களை கையில் எடுப்பதிலும் சரி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அரசிடமிருந்து கேட்டுப் பெற்றுத் தருவதிலும் சரி பாரதிய ஜனதாவின் பணி என்றுமே சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு வெங்கடேசன் பேசினார் இ இதை அடுத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன 

தொடர்ந்து பானை சட்டிகளை கொண்டுவந்து உடைக்க இருந்த தொண்டர்களின் கையில் இருந்த பொருட்களை சத்துவாச்சாரி போலீசார் அடித்து உடைத்து சுக்குநூறாக... இதனால் சிறிது நேரம் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

No comments

Thank you for your comments