Breaking News

அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு:

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


ஈரோட்டின் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர்,  தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமிக்கு அவர்கள்  கடந்த சில நாட்களாக  பல்வேறு அரசு திட்ட விழாக்களில் பங்கேற்று வந்தார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினரிடமும்  நேர்காணல் நடத்தி வந்தார்.  இதேபோல் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்தும் வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமைச்சர்  முத்துசாமிக்கு லேசான காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.  இதில் அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு லேசான அறிகுறியே இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதையடுத்து அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments