7 உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக திருப்பூர் மாநகரில் நியமனம்
திருப்பூர்:
கோவை மாநகரம் மதுரை கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக திருப்பூர் மாநகரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தாமோதரன் 15 வேலம்பாளையம் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தெய்வமணி வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், ஜெகநாதன் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், மகாலட்சுமி நல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஜமுனா மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும், ராஜேஸ்வரி 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பத்ரா மத்திய சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாபு அவர்கள் உத்தரவிட்டார்.
மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரத்தினகுமார் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரணவண ரவி அனுப்பர்பாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். 15 வேலம்பாளையம் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வி.ராஜன் அவர்களை நியமித்துள்ளனர்
No comments
Thank you for your comments