கிணத்துக்கடவு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் , தி.மு.க கிணத்துக்கடவு மத்திய ஒன்றியச் செயலாளர் கே. கே செந்தில்குமார் மயிலேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி தலைமையில் துணைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், யூனியன் கவுன்சிலர் ராமலிங்கம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ரமேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் செந்தில், லீலாவதி , மயிலேரிபாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் கார்த்திக், கழக உறுப்பினர்கள் குமார், ஏசுதாஸ், நாராயணன், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ், ரவிச்சந்திரன், வெள்ளிங்கிரி, கழக நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments