சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 180 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்
ஈரோடு:
73-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 180 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்....
ஈரோடு மாவட்டம், வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2022) நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, 49 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த 180 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 காவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், காவல்துறையின் சார்பில் 39 காவலர்களுக்கும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் 8 நபர்களுக்கும், ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பில் 5 நபர்களுக்கும், 108 ஆம்புலன்ஸ் சார்பில் 8 நபர்களுக்கும்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் 5 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஒரு நபருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 26 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் துறையின் சார்பில் 10 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 19 நபர்களுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 4 நபர்களுக்கும், மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும்,
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் 4 நபர்களுக்கும், உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 4 நபர்களுக்கும் துணை ஆணையர் (மாநில வரி)அலுவலகம் சார்பில் 3 நபர்களுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஈரோடு மேற்கு / பெருந்துறை சார்பில் 5 நபர்களுக்கும் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் சார்பில் 3 நபர்களுக்கும், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கட்டடம் சார்பில் 2 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2 நபர்களுக்கும் மற்றும் தன்னார்வலர்கள் 6 நபர்களுக்கும் என மொத்தம் 229 நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டது. மேலும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது சுதந்திர போராட்டத்தியாகிகளை அழைத்து கெளரவப்படுத்துவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகும். நடப்பாண்டு, சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் 9 சுதந்திர போராட்ட தியாகிகள், 12 மொழிப்போர் தியாகிகள், மொடக்குறிச்சி வட்டத்தில் 4 சுதந்திர போராட்ட தியாகிகள், 4 மொழிப்போர் தியாகிகள், 4 எல்லைக் காவலர்கள், கொடுமுடி வட்டத்தில் 6 சுதந்திர போராட்ட தியாகிகள், 32 மொழிப்போர் தியாகிகளும் ஒரு எல்லைக் காவலரும், பெருந்துறை வட்டத்தில் 2 சுதந்திர போராட்ட தியாகி, 10 மொழிப்போர் தியாகிகள், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 2 மொழிப்போர் தியாகிகள், அந்தியூர் வட்டத்தில் 3 மொழிப்போர் தியாகிகள், பவானி வட்டத்தில் 3 சுதந்திர போராட்ட தியாகிகள், 11 மொழிப்போர் தியாகிகள், சத்தியமங்கலம் வட்டத்தில் ஒரு சுதந்திர போராட்ட தியாகியும் என மொத்தம் 25 சுதந்திர போராட்ட தியாகிகள், 74 மொழிப்போர் தியாகிகள் மற்றும் 5 எல்லைக் காவலர்கள் என 104 நபர்களை கெளரப்படுத்தும் வகையில் கதர் சால்வை அணிவித்து கெளரப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ரா., தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி.என்.சிவகுமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேசன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி, முருகேசன் (வேளாண்மை), ஈஸ்வரன் (கணக்கு), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.கோமதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சோமசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், மாற்றுத்திமனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கொடுமுடி வட்டாட்சியர் ஸ்ரீதர் உட்பட அரசு துறை சார்ந்த அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments