கஞ்சா விற்பனை - 2 பேர் கைது... 2.300 கி.கி கஞ்சா பறிமுதல்
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு வால்பாறை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் கற்பகம் மற்றும் கண்ணன் தலைமையில் வால்பாறை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த வால்பாறை புதுதோட்டம் பகுதியில் வசிக்கும் அருளப்பன் என்பவரின் மகன் இயேசு (வயது-52) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேலும் இதேபோன்று பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவசந்திர சகானி என்பவரது மகன் திலிப்சகானி (வயது-39) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேற்படி இரண்டு நபர்களிடம் இருந்து சுமார் 2.300 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அந்நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
No comments
Thank you for your comments