தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூர்:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 10 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இன்று (25.01.2022) பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில்
வேலூர் அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா. தரணி முதல் பரிசையும்,
வேலூர் வாணி வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மு. ஜெயவிஷ்ணு இரண்டாம் பரிசையும்,
வேலூர் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீ. ராஜஸ்ரீ மூன்றாவது பரிசையும்,
மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசுகளை பொய்கை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ச. கீர்த்திகா மற்றும் சின்னபள்ளிக்குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ். லோகேஷ் ஆகியோர் பெற்று கொண்டனர்.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில்
வேலூர் சாயிநாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி த. விஜயலட்சுமி முதல் பரிசையும்,
வேலூர் ஊரீசு கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் ச. திவாகர் இரண்டாம் பரிசையும்,
குடியாத்தம் காந்தி நகர் அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி ரா. காயத்ரி மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் தோட்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி மு. ஸ்வருபஸ்ரீ முதல் பரிசையும், வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி லா. சாஜீதா ஜெஹ்ரா இரண்டாம் பரிசையும்,
தோட்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீ. ஸ்ரீவந்தி மூன்றாவது பரிசையும், மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசுகளை திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி க. பூர்ணிமா மற்றும் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜா. அப்துல்பாரி ஆகியோர் பெற்று கொண்டனர்.
ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வேலூர் ஊரீசு கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் ச. திவாகர் முதல் பரிசையும், வேலூர் சாயிநாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி த. விஜயலட்சுமி இரண்டாம் பரிசையும், அக்சிலியம் (தன்னாட்சி) கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாமாண்டு பயிலும் மாணவி ச. காவ்யா மூன்றாவது பரிசையும் பெற்றனர். இந்நிகழ்விற்கான முன்னேற்பாடு பணிகளைத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி. ப. இராஜேசுவரி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
No comments
Thank you for your comments