பிரியங்கா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆதரவற்ற மாணவிகளுக்கு உணவு வழங்கல்
காஞ்சிபுரம், ஜன.12-
காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆதரவற்ற மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் இந்திரா காந்தி அவர்களின் பேத்தியுமான பிரியங்கா காந்தியின் பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் காங்கிரஸ்காரர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் குருகுல ஆதரவற்ற மாணவிகளின் காப்பகத்தில் நேற்று மாலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் நாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், மாநில நிர்வாகிகள் பத்மநாதன் சங்கரலிங்கம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி சீனிவாசன், நடராஜன் ராதாகிருஷ்ணன் திருவேங்கடம், மாவட்ட துணைத்தலைவர் தாரன், மாவட்ட நிர்வாகிகள் அரங்கநாதன் நகர் அன்பு, சாதிக் பாஷா, ஆட்டோ ரவி, லோகநாதன், பிள்ளையார்பாளையம் ஆறுமுகம், பாலமுருகன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசின் உத்தரவுப்படி கொரோனா விதிகளை கடைபிடித்து மிகவும் எளிமையான முறையில் இவ்விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments