Breaking News

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி ஆணையிட்ட முதல்வருக்கு பயணாளிகள் நன்றி தெரிவித்தனர்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் கொரோனா நிவாரண நிதி, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி என பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 

தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2022 சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் என மொத்தம் 2.15கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணையிட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் (இலங்கை அகதிகள் முகாம் உட்பட) செயல்படும் 1250 நியாய விலைக் கடைகள், கருப்பட்டி  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் 19 நியாய விலைக் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 105 நியாய விலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 54 நியாய விலைக் கடைகள் என மொத்தம்1428 நியாய விலை கடைகளின் மூலம் 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58.02கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது, இப்பரிசுத் தொகுப்பினை  மாவட்டத்தில் 99,32,51 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மேல் பெற்று (92%க்கும் மேல்) பொதுமக்கள் பெற்று பயனடைந்து பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இம்மாத இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.இப்பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்ற பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சின்ராஜம்மாள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர்  பொங்கல் பரிசுத் தொகுப்பினை மிகவும் தரமானதாகவும், சிறப்பானதாகவும், பொங்கல் பண்டிகைக்குத் தேவையான அனைத்து பொருட்களை உள்ளடக்கியதாகவும், தந்துள்ளார்கள். இப்பரிசு தொகுப்பில் 1). பச்சரிசி 1 கிலோ 2). வெல்லம் 1கிலோ 3). முந்திரி 50கிராம் 4). திராட்சை 50கிராம் 5). ஏலக்காய் 10 கிராம் 6).பாசிப்பருப்பு 500 கிராம் 7). நெய் 100 கிராம் 8). மஞ்சள் தூள் 100 கிராம் 9). மிளகாய் தூள் 100 கிராம் 10). மல்லித்தூள் 100 கிராம் 11). கடுகு 100 கிராம் 12).சீரகம் 100 கிராம் 13). மிளகு 50 கிராம் 14). புளி 200 கிராம் 15). கடலை பருப்பு 250 கிராம் 16). உளுத்தம் பருப்பு 500 கிராம் 17). ரவை 1கிலோ 18). கோதுமை மாவு 1 கிலோ 19). உப்பு 500 கிராம் 20). துணிப்பை ஒன்று மற்றும் 21).கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படுவதால் மிகச்சிறப்பாக பொங்கல் திருநாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இப்பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகுத்த தமிழக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்கள்...

No comments

Thank you for your comments