Breaking News

ஜவுளிகளின் மீது விதித்துள்ளக 5% ஜிஎஸ்டி வரி ரத்து செய்யக்கோரி சங்கங்களின் சார்பில் தீர்மானம்...

அகில பாரத பத்மசாலியர் சங்கம் தமிழ் நாடுசங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட சங்கம் சார்பில் மத்திய அரசு ஜவுளிகளின் மீது விதித்துள்ளக 5% ஜிஎஸ்டி வரி ரத்து செய்யக்கோரி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அகில பாரத பத்மசாலியர் சங்கம் தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட பத்மசாலியர் சங்கம் இணைந்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பத்மசாலியர் சங்கத் தலைவர் ஸ்ரீராம் ஜி ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா மாநில கைத்தறி தூதர் பூனம் காபூர் அகில பாரத பத்மசாலியர் இளைஞரணி தலைவர் குண்டட்டி ஸ்ரீதர், அகில பாரத பத்மசாலியர் சங்க கைத்தறி நெசவாளர் அணித் தலைவர் வெங்கண்ண நேத்தா, இளைஞர் அணி பொருளாளர் அவ்வாரி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் மோகன் செட்டியார் மாநில பிரதிநிதி சேகர் குணசேகர் காஞ்சிபுரம் மாவட்ட பத்மசாலியர் சங்க செயலாளர் ஜெயக்குமார் .மொகிலி வரதன். காஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி, குமார் பாலாஜி, ருக்மநாதன் உள்ளிட்ட குறைந்த அளவே நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவின் இறுதியில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments