வாக்காளர் பட்டியலில் போண்டா பஜ்ஜி... அதிர்ச்சியில் பொதுமக்கள்...
கோவை
கோவை பூலுவபட்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள டீக்கடையில் வாக்காளர்களின் பெயர், முகவரி புகைப்படங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் தொகுப்பு போண்டா வடை கட்டிக்கொடுக்க பயன்படுத்து கின்றனர்.
இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்து எப்படி டீக்கடைக்கு வாக்காளர்கள் பட்டியல் கிடைத்தது குறித்தும் அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments
Thank you for your comments