Breaking News

வேந்தர் பொறுப்பில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்! ஆளுநர் வலியுறுத்தல்

கொச்சி, ஜன.5-

கேரள பல்கலைக்கழக வேந்தர் என்ற வகையில் நான் செயல்படுவதற்கு இடையூறுகள் உள்ளன. இத்தகைய சிக்கலில் நான் செயல்பட விரும்பவில்லை எனவே கேரள சட்டமன்றத்தைக் கூட்டி வேந்தர் பொறுப்பிலிருந்து கேரள மாநில ஆளுநரை நீக்கிவிடுங்கள் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஒரு மாதமாக கேரள மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற வகையில் முகம்மது கான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரள மாநிலத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த 13 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக எந்த கோப்பு ஆளுநருக்கு அனுப்பு பட்டாலும் அந்த கோப்பை மாநில முதல்வருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி விடுகிறார்.

ஆளுநர் என்ற வகையில் எந்தப் பணியையும் அவர் செய்யவில்லை. கேரள மாநில சட்டமன்றத்தில் கூட்டி என்னை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை இயற்றி எனக்கு அனுப்புங்கள் உடனே நான் அதில் கையெழுத்துப் போட்டு விடுகிறேன் என்று ஆரிப்கான் கூறினார்.

இல்லையென்றால் ஒரு அவசர சட்டத்தை தயார் செய்து அனுப்புங்கள் அதில் நான் கையெழுத்துப் போட்டு விடுகிறேன் முதல்வரை வேந்தராக்கும் அவசரச் சட்டத்தில் நான் கையெழுத்துப் போட தயார்.

இங்கு மிகவும் முக்கியமான ஒன்று நடந்துவிட்டது அரசியல் சட்டத்தின் படி நடக்க வேண்டிய ஒன்று முறை தவறி நடைபெற்றுள்ளது இந்நிலையில் நான் வேந்தராக இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. என்ன நடந்தது என்று நான் இப்பொழுது கூற இயலாது தேசிய அமைப்புக்கள் அதனுடன் சம்பந்தப் பட்டுள்ளன என்னுடைய உதடுகள் இறுக ஒட்டப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments