வார இறுதியில் முழு ஊரடங்கு அறிவிப்பு
புதுடெல்லி, ஜன.5-
தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுதப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, டெல்லியில் ஒமைக்ரான் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. 8-10 நாட்களில் 11,000 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துகிறோம்.
தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்களின் வெளியே மக்கள் கூடுவதை தடுக்க மீண்டும் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் முழு இருக்கைகளுடன் இயக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.
No comments
Thank you for your comments