ஸ்ரீநகரில் 5 லட்சம் சதுர அடி துபாய் ஷாப்பிங் மால்
ஸ்ரீநகர், ஜன.5-
ஸ்ரீநகரில் 5 லட்சம் சதுர அடி கொண்ட மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை துபாய் நாட்டு இஎம்ஆர் பிராப்பர்டிஸ் என்ற நிறுவனம் கட்ட முன்வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் நிர்வாகத்துக்கும் துபாய் அரசுக்கும் இடையே இந்த ஷாப்பிங் மால் கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தத் தகவலை இ.எம்.ஆர். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக இந்த ஷாப்பிங் மால் அமையும் என்று தெரிகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட் கைகளும் பங்குதாரர்களாக பல வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் இந்தியத் தூதர் அகமது அப்துல் ரஹ்மான் அல்பன்னா இ எம் ஆர் நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இதுபோன்ற பல முதலீட்டு திட்டங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு வந்து சேரும் என்று நம்புவதாகவும் கூறினார்.
No comments
Thank you for your comments