Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டும் சுவர் விளம்பரம்

சென்னை, ஜன.25-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சிகள் பிரசாரம் செய்ய கொரோனா கட்டுப்பாடு காரணமாக பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

இதற்காக இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களுக்கான இடங்கள் எந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் முறைப்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சிகள் பிரசாரம் செய்ய கொரோனா கட்டுப்பாடு காரணமாக பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சுவர் விளம்பரம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் தற்போதே சுவரில் விளம்பரம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மாநகர பகுதியில் பல்வேறு இடங்களிலும் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகிறது.

எந்த கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் கட்சிகளின் சின்னங்கள் வரையும் பணி தீவிரமடைந்துள்ளது. மேயர் போட்டிக்கு நேரடி தேர்வு இல்லாததால் வார்டு கவுன்சிலர்களாக வெற்றி பெறுபவர்கள் மேயர், துணை மேயர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

No comments

Thank you for your comments