2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்...
2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குவது குறித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது,
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இத்துறையின் கீழ் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/ நீண்டகால தொழிற்பிரிவுகள் நடத்த அங்கீகாரம் பெறுதல்/ அங்கீகார நீட்டிப்பு கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் தொடர்பாக விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 2022 முதல் 30.04.2022 நள்ளிரவு 11:59 மணிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர்ரோடு, கிண்டி, சென்னை - 600032 (தொலைபேசி: 044-22501083; 044-22500099; 044-22500199) அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு;செய்திமக்கள்தொடர்புஅலுவலர், ஈரோடு.
No comments
Thank you for your comments