பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த இருவர் கைது
கோவை, ஜன.12-
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலையை செருப்பு மாலை அணிவித்து காவி பொடிகள் தூவி அவமதிப்பு செய்த இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைது...
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் அருண் கார்த்திக் (26), வேலுமணி என்பவரின் மகன் மோகன்ராஜ் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பு டிவிஷன் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
No comments
Thank you for your comments