லாரியில் சிக்கி இளைஞர் பலி
வேலூர், ஜன.20-
காட்பாடியில் லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு...
காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் கே. பரந்தாமன் (வயது 30). இவரது நண்பர் பாலாஜி. நேற்று காலை இருவரும் பைக்கில் வேலூர் நோக்கி வந்தனர். பாலாஜி பைக்கை ஓட்டி வந்தார். கே. பரந்தாமன் பின்னால் அமர்ந்திருந்தார்.
சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அவர்களுக்கு முன்னால் வலது புறமாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென இடதுபுறம் ஒதுங்கியதால் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் இருந்த கே. பரந்தாமன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். அவர் மீது லாரி ஏறி ஏறி இறங்கியது. கே. பரந்தாமன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாலாஜி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்
இந்த விபத்தால் காட்பாடி வேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதம்பட்டு காவல் துறை ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர்கள் மனோகரன், ஆதர்ஷ், ராமமூர்த்தி விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் லாரி ஓட்டுநர் வந்தவாசியை சேர்ந்த சாதிக் பாஷா என்பவனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்திற்கு அதிவேகமாக வந்த லாரியும் மேலும் காட்பாடி பகுதியில் தாறுமாறாக ஓடும் ஆட்டோக்களினாலும் மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளாலும் இது போன்ற உயிரிழப்புகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. வாழ வேண்டிய வயதில் சாலையில் தறிகெட்டு ஓடும் வாகனங்களால் இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதுபோன்று இனி வேறு ஒரு மரணம் நிகழாமல் இருக்க இனியாவது காவல்துறையினர் விழித்துக்கொண்டு இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
🔥 Also Read
No comments
Thank you for your comments