கோதவாடி ஊராட்சி நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்...
கோவை:
தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சி நியாயவிலை கடையில் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றிய செயலாளர் கிரிகதிர்வேல் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார் .
இந்நிலையில் முன்னாள் ஒன்றியகுழுதலைவரும் அஇஅதிமுக ஒன்றிய செயலாளராக பணியாற்றி தற்போது தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட கோதவாடி கே.எம் மயில்சாமி நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கிளை செயலாளர்கள் இளங்கோவன்,சின்னு(எ) ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிவக்குமார், மகேஸ்வரி ,ஜெயக்குமார், இந்திராணி குமார், ஒன்றிய பிரதிநிதிகள் கார்த்திக், நாகராஜ், ராசு மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments