Breaking News

கிணத்துக்கடவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 533 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது...

தமிழ்நாட்டில் உள்ள 15 முதல் 18 வயது வரையள்ள சிறார்களுக் கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடங்கி வைத்ததையொட்டி  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல்லட்டிப்பாளையம்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் டாக்டர் சித்ரா தலைமையின் கீழ் மருத்துவ குழுவினர் மாணவ மாணவிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி  முதல் தவனையாக 533 நபர்களுக்கு   செலுத்தப்பட்டது.

இம்முகாமில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் திலிப்குமார், டாக்டர் அருண் பிரக்காஸ்,  சுகாதார ஆய்வாளர் குணசேகரன் கலந்துகொண்டனர்.



No comments

Thank you for your comments