Breaking News

ஆவடி மாநகராட்சியில் போட்டியிட ஆர்வம் காட்டும் வேட்பாளர்கள்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியாக மாற்றப்பட்டு தற்போது நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் இந்த மாநகராட்சியில் வேட்பாளர்கள் களம் இறங்குவதற்காக 28.01 2022 அன்று 153 நபர்களும் 29.01. 2022 அன்று 210 நபர்களும் 31.01.2022 அன்று 194 நபர்களும் மொத்தமாக இதுவரை 557 நபர்கள் விண்ணப்பங்களைப் பெற்று சென்றிருக்கின்றனர்.

இன்று அமாவாசை என்பதால் 6 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த வெங்கட்டாபுரம் 20வது-வார்டை சார்ந்த கலைச்செல்வி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார் மற்ற நபர்கள் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேறு எந்த கட்சி நபர்களும் இன்று மனுதாக்கல் செய்யவில்லை புதன்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவிப்பு வெளியாகின்றன

No comments

Thank you for your comments