நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ... ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சி, மூன்று பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு பெறுதல் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்தல் உள்ளிட்டவைகள் கடந்த 28ந் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 500க்கும் மேற்பட்ட நபர்கள் விருப்பமனு பெற்றுச் சென்றுள்ளனர். கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாடு முடிவடையததால் அரசியல் கட்சியினரின் இடையே வேட்புமனு தாக்கல் சற்று தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்கு சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது.
இதில் காலை மற்றும் மாலை என இரு வேலைகளை தலா 800க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் கொண்டு அதனை கையாளும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டு அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அலுவலர்களின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சியாளர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகள், அதை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாக அவர்களுக்கு செயல்முறையில் பழகும் வண்ணம் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் நாராயணன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
No comments
Thank you for your comments