Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...

காஞ்சிபுரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காஞ்சிபுரம்  மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளாக, தனி அலுவலர்கள் பொறுப்பில் இயங்கின. நீண்ட இடைவெளிக்கு பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், உள்ளாட்சிகளை ஆட்சி செய்ய இருக்கின்றன. மாநகராட்சியில், 51 வார்டு; இரண்டு நகராட்சிகளில், 57 வார்டுகள்; 03 பேரூராட்சிகளில், 48வார்டுகள் என, 156 வார்டுகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மாநகராட்சி நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்தியாளரிடம் கூறியதாவது

தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு டிஆர்ஓ வாக உள்ள நாராயணன் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும் ஆணையாளர்கள் தாமோதரன் மற்றும் சுமா குன்றத்தூர் மாங்காடு நகராட்சிக்கும், இதேபோன்று, செயல் அலுவலர்கள் லதா மற்றும் பிரேமா உத்திரமேரூர் வாலாஜாபாத் பேரூராட்சிக்கும் முதுநிலை ஆசிரியர் சேவியர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கும்,  நியமிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள வசதிகளை பார்வையிடுதல், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறதா என கண்காணித்தல். தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனரா என்பதை கண்காணித்தல். ஓட்டுப்பதிவு புள்ளி விபரங்களை சேகரித்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இரண்டு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன மற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலா ஒரு பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 7 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு பறக்கும் படைகளும் 8 மணி நேரம் வரிசையில் மூன்று அணிகள் பணிபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும் இதற்காக அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவிட் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய பணிகளை கண்காணிக்க துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .

காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் மூன்று பேரூராட்சிகளுக்கு காஞ்சிபுரம் அருகே இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருக்கின்றன குன்றத்தூர் மாங்காடு நகராட்சிகளின் வாக்கு எண்ணும் மையம் மாதா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments