Breaking News

அடி கருட ஆழ்வார் சிலையை பூஜை செய்து வழி அனுப்பிய கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஜன.6-

மாமல்லபுரத்திலிருந்து வாலாஜாபேட்டையில் பிரதிஷ்டை செய்ய எடுத்து செல்லப்பட்ட 16.8 அடி கருட ஆழ்வார் சிலைக்கு காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் சிறப்பு வரவேற்பு... கிராம மக்கள் பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை பகுதியில் உள்ள கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 88-வது சன்னதியாக விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் 8 அடி அகலமும் 16.8 அடி உயரமும், 8 தலைகள் கொண்ட நாகத்தோடு  30 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன கல் கருடன் சிலை செய்து முடிக்கப்பட்டு உள்ளது.


30 டன் கொண்ட விஸ்வரூப அஷ்ட நாக கல்கருட சிலையை மாமல்லபுரத்திலிருந்து வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு லாரி மூலம் இன்று கொண்டு செல்லப்பட்டது.

மாமல்லபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு கல்கருடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வாலாஜாபாத் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்திற்கு வந்தபோது தொழிலதிபர் எஸ் எம் சில்க்ஸ் மனோகரன் தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து விஸ்வரூப அஷ்ட நாக கல்கருடன் சிலைக்கு உற்சாக வரவேற்பு அளித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வாலாஜாபேட்டைக்கு வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88வது சன்னதியாக அமையும் பெரிய திருவடியான விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடனை வணங்கினால் சர்ப்ப தோஷங்கள், திருமணம்,மற்றும் புத்திர தடை, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், வாகன விபத்துகள், தோல் வியாதிகள் போன்றவை அகலும் மனக்குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், விஷ்ணுவின் அருளும், மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனவும், கல்கருடன் பிரதிஷ்டா மஹோத்சவம் உற்சவம் வரும் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது என ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments