Breaking News

தொழிற்சாலை மனிதவள மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.5-

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை மனிதவள மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் வி.சத்தியபிரியா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சுதாகர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை மனிதவள மேலாளர்களுடன் இன்று (05.01.2022) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சுமார் 300 தொழிற்சாலைகளின் மனிதவள மேலாளர் கலந்து கொண்டனர்.

Hyundai Trainis Lear pvt Ltd  கம்பெனியின் மனிதவள பொதுமேலாளர் தயாநிதி ராகவ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், தொழிற்சாலையில் ஏதேனும்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். 

தொழிற்சாலையில் வெளிமாநிலதவரை பணிக்கு அமர்த்தும் போது அவரின் உண்மைத் தன்மையை அறிந்து பணிக்கு அமர்த்த வேண்டும். தொழிலாளர்களை தங்கவைக்க்கும் இடங்களில்  குடிநீர் உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மிரட்டல் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் நிர்வாகம் காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம்.  அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

தொழிற்சாலைகள் அதிக அளவில் CCTV CAMERA-க்களை பொது இடங்களிலும் பொருத்த முன்வர வேண்டும். இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்க காவல்துறைக்கு எளிமையாக இருக்கும் என தெரிவித்தார்கள். 

இறுதியாக சாம்சங் கம்பெனியின் மனிதவள மேலாளர்பார்த்திபன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

No comments

Thank you for your comments