குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கல்...
மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இன்று திங்கட்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர்.
முதியோர் மற்றும் பொது மக்களுடைய மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ் சேகர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கொரொனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியும், மாவட்ட அலுவலகம் உள்ளே வரும் அனைவருக்கும் பாதுகாப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்பு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் ஒரு பகுதியாக பயனாளிகளைத் தேர்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் வழங்கினார்
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி செந்தில்குமாரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments