5 ஊராட்சிகளில் சுமார் ரூ. 26 லட்சம் மதிப்புடைய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் 5 ஊராட்சிகளில் 26 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புடைய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டது.
காஞ்சிபுரத்தில் 5 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சாரத்தை சரிசெய்யும் பொருட்டு மின்மாற்றிகள் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை வடக்கு கோட்டம் சிறுகாவேரிபாக்கம், செவிலிமேடு, அசோக் பிரிவுக்குட்பட்ட வையாவூர், வெங்கடாபுரம், புத்தேரி மிஸ்ரி நகர், கொட்ராங்குளம் ஆகிய பகுதிகளில் புதிய 100KV மின்மாற்றியையும், திம்ம சமுத்திரம் பகுதியில் 25கிலோ வாட் மின்மாற்றியை 63கிலோ வாட் மின்மாற்றியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் 26 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன், நீலகண்டன், மகாலட்சுமி ராஜசேகர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் விமல்ராஜ், ரோகா ஸ்டான்லி போன்றவர்களும், மேற்பார்வை பொறியாளர் பிரசாத், செயற்பொறியாளர் சரணதங்கம், உதவி செயற் பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் சபரிநாத் போன்ற மின்வாரிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments