Breaking News

வைணவ ஆலயத்தில் முதன்முதலாக மகாபெரியவர் திருவுருவ சிலை பிரதிஷ்டை

வைணவ ஆலயத்தில் முதன்முதலாக மகாபெரியவர் திருவுருவ சிலை பிரதிஷ்டை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் ஸ்ரீ மகாபெரியவா சத்சங்கம் சார்பில் நடைபெற்றது.

ஒரு காலத்தில் மிகப் பெரிய வித்வான்களும் ஆச்சார்யன்களும் வசித்து ஆராதனம் செய்து வந்த கிராமம் அம்மணப்பாக்கம். செங்கல்பட்டு மாவட்டம்.

இக்கிராமத்தில் திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபமாய் சேதனர்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் உருவத்தில் சிறியவர் எனினும் கீர்த்தியில் மிகப் பெரியவர்..

இக்கோவில் ஏறத்தாழ 450 வருடங்களுக்கு முன்பு அன்று ஸ்ரீ அகோபில மடத்தின் 3வது அழகிய சிங்கராய் எழுந்தருளி இருந்த ஸ்ரீ வண் சடகோப ஸ்ரீ பராங்குச யதீந்திர மஹா தேசிகன் என்ற ஆசார்யரால் நிறுவப்பட்டது.

சிறப்புகள்:

இக்கோவில் பெருமாளை சேவிப்பதன் மூலம் அனைத்து காரியங்களும் நிறைவேறும். மேலும், திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

திருமண தடை விலக இங்குள்ள ஆண்டாளுக்கு பூரத்தன்று துளசி அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் செய்து வழிபடுவது இக் கோயில் சிறப்பு.

இங்கு உள்ள பெருமாளுக்கு திருவோணம் நட்சத்திரத்தன்று துளசி அர்ச்சனை செய்து அக்காரவடிசல் செய்து வழிபட திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.


உத்திரம் நட்சத்திரம் அன்று இங்குள்ள பெருந்தேவி தாயாருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் காரியத்தடை விலகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபுர அமைப்பு: 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். ஆம் . இங்குள்ள கோபுரத்தில் தசாவதாரம் பகவானின் பத்து அவதாரங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இத் திருக்கோயில் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள். மற்றும், உபய மூர்த்திகளாக  ஸ்ரீ னிவாச ஸ்ரீ தேவி, பூதேவி, பெருந்தேவி தாயார், சக்கரத்தாழ்வார், விஷ்வசேனர், நம்மாழ்வார், ஆண்டாள், ஸ்ரீ ராமானுஜர், தேசிகர், பெரிய திருவடி கருடாழ்வார், சிறிய திருவடி ஆஞ்சநேயர், போன்றவர்களை  ப்ரதிஷ்டை செய்து சுமார் 450 வருடங்கள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..

பழம் பெருமை வாய்ந்த இக் கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இப் பொழுது திரு. இராஜா ஸ்வாமி அவர்களால் இக் கோயில் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் திருப்பணியில் எங்களுடன் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத்சங்கமும் இணைந்து எங்களுக்கு ஆதரவு தந்து வருகின்றனர். 

இக்கோவிலில் மகா பெரியவா சிலா ப்ரதிஷ்டாணம் நடை பெற எங்களுக்கு உதவியாக இருந்தது இப்பெரும் சத்சங்கம் தான். இந்நிலையில் ஸ்ரீ சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுபவத்துடன் மகா பெரியவர் சிலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஸ்ரீசங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. வைணவ ஆலயத்தில் மகா பெரியவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ மகாபெரியவா சங்க நிர்வாகிகள் ராமன். நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments