கொலை- கொள்ளை உட்பட 48 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி நீதிமன்றத்தில் திடீர் சரண்
சென்னை:
தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜாரானார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது 8 கொலைகள், 9 கொலை முயற்சிகள் 8 வழிப்பறி , 6 அச்சுறுத்தி மிரட்டுதல், 4 மணல் வழக்குகள், உட்பட மொத்தம் 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.
இதனிடையே படப்பை குணாவின் மனைவி நீதிமன்றத்தில் தன் கணவரை போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சிப்பதாக மனு ஒன்றை அளித்தார். ஆனால் இதனை மறுத்த காவல்துறை குணாவை எண்கவுண்ட்டர் செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் சரணடைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து குணாவின் மனைவி மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி குணா இன்று சரணடைந்தார். ( காவல்நிலைய குற்ற எண் 786/21 U/s 195A,141,342,447,506(1),307, IPC) .
அவரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரவுடி குணாவை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
No comments
Thank you for your comments