Breaking News

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் வரன்முறைப் படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டணம் செலுத்த அறிவிப்பு

ஈரோடு:

சென்னை இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அவர்களின் கடித ந.க.எண்: 35943/2017/பிஆர்ஐ 3-3, நாள்: 9.11.2017. ன்படி கிராம ஊராட்சிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் வரன்முறைப் படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டணம் நாளது வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 


தற்போது ஊரகப்பகுதிகளில் உள்ள மனைப்பிரிவு  மற்றும் தனிமனைகள் வரன்முறைப்படுத்துவது  தொடர்பாக வளர்ச்சிக் கட்டணத்தை செலுத்தும் பொருட்டு, அந்தந்த ஊராட்சிகளிலேயே ECS (ஈ.சி.எஸ்) / RTGS (ஆர்.டி.ஜி.எஸ்.) மூலம் வளர்ச்சிக் கட்டண தெகை செலுத்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி விபரம் பெற்றுக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments