Breaking News

வேலூரில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை...

வேலூர் மாவட்டம் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூரில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் பென்னாத்தூர், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

உரிய ஆவணம் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டள்ளனர். 

அதனையடுத்து  வேலூர் மாநகராட்சி வேலூர் ராஜா திரையரங்கம், சாய்நாதபுரம், ஓட்டேரி, பாகாயம், உள்ளிட்ட சாலை சந்திப்புகளில் துணை மாநில வரி அலுவலர் கலைவாணி சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர் பெண் காவலர் சுதா கேமராமேன் கொண்ட பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் 

மேலும் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்


No comments

Thank you for your comments