பாஜக சார்பில் கட்சி சீட் ஒதுக்க வில்லையென்றால் சுயேட்சையாக நிற்பேன்... சூளுரைத்த விஜயாபானு
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி பாஜக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மாநகராட்சி தேர்தலில் 5 வது வார்டில் போட்டியிட நேர்காணல் நடைபெற்றது. இதில் பட்டியலின மாவட்ட பொதுச்செயலாளர் விஜயாபானு பங்கேற்று தனக்கு பாஜக சார்பில் கட்சி சீட் ஒதுக்க வில்லையென்றால் சுயேட்சையாக நின்று வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் விருப்ப மனு மற்றும் நேர்காணல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட உள்ளவர்களிடம் பா.ஜ.க மாநில செயலாளர் கார்த்தியாயிணி மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொது செயலாளர் எஸ்.எல்.பாபு ஆகியோர் நேர்காணல் நடத்தினார்
இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 5 வது வார்டில் போட்டியிடுவதற்கான நேர்காணலில் பட்டியலின பாஜக மாநில துணைத்தலைவர் விஜயாபானு அவர்கள் கலந்து கொண்ட பொழுது மாநில பாஜக செயலாளர் கார்த்தியாயிணி அதே மாநகராட்சி 5வது வார்டில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் போட்டியிடும் சூழ்நிலை வந்தால், நீங்கள் எப்படி போட்டியிட முடியும் என்று எழுப்பிய கேள்விக்கு நான் கட்சியில் சிறந்த முறையில் அனைத்து பணிகளையும் மாற்றியுள்ளேன். கட்சிக்கு அப்பாற்பட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக நல திட்டங்களையும் செய்துள்ளேன். எனக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் எனக்கு சீட் ஒதுக்கிவிட்டால் அதே 5 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி நான் வெற்றி பெறுவது நிச்சயம் எனது வெற்றியை எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சூளுரைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சிப் பிரிவு வெங்கடேசன், ஊடகப்பிரிவு ஆனந்தன் உட்பட திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments