Breaking News

இணையத்தில் ட்ரெண்டாகும் விராட் கோலி குறித்த அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு..!

ஒரு காலத்தில் இந்தியாவே கொண்டாடிய பல இளைஞர்கள் ரோல் மாடலாக கொண்ட வீரர் விராட் கோலி. இன்று பல சர்ச்சைகள் அவரை பின் தொடர்கின்றன என்பதை மறுக்க இயலாது. தொடர்ந்து பல நிகழ்வுகள் கோலி குறித்து சர்ச்சைகளாக வைரலாகி வருவதாலும் இந்திய அணியின் கேப்டன் மாற்றங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இது குறித்து பிரபல பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா ஒரு நெகிழ்வானது பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஷ்கா ஷர்மாவின் பதிவு:

"எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும் போது நீதான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கூறியது. அன்று நீ, நான், தோனி மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். தோனி அன்று நகைச்சுவையாக உன் தாடி இவ்வளவு வேகமாக நரைத்துவிட்டதே என்று கூறினார். 

அன்றிலிருந்து நான் கவனித்து வருகிறேன். உன் தாடி மட்டும் நரைக்கவில்லை. உன் வளர்ச்சியை பார்த்திருக்கிறேன், உன்னை சுற்றியும், உனக்குள்ளும் வளர்ச்சி அபரிவிதமாக இருந்துள்ளது. நீ இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட காலத்தை நினைத்து பெருமைப்படுகிறேன், உனது காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி செய்த சாதனைகளை கண்டு வியக்கிறேன். 

இதையெல்லாம் விட உனக்குள் நீ சாதித்த வளர்ச்சியை நான் பெரிதாக நினைக்கிறேன். 2014ம் ஆண்டு நீ மிகவும் அனுபவமற்ற , யாரையும் எளிதில் நம்பக்கூடிய இளம் வீரனாக இருந்தாய், நல்ல திட்டங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தாய், நேர்மறையான எண்ணங்களே உன் வாழ்க்கையை நகர்த்திச்செலும் என்று நம்பினாய். அவை நிச்சயம் நடக்கும் ஆனால் அதில் சவால்கள் அதிகம் இருந்தது. 

நீ களத்துக்கு வெளியே சந்தித்த சவால்கள் ஏராளம், ஆனால் இது வாழ்க்கையல்லவா, நீ குறைவாக சவால்களை எதிர்பார்த்த இடத்தில் கூட உனக்கு சவால்கள் அதிகமாகவே இருந்திருக்கிறது.

உனது எண்ணங்களோடு நான் துணை நின்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நீ ஒரு தலைவனாக முன்னின்று வழிநடத்தினாய், வெற்றிகளில்தான் உத்வேகம் இருக்கிறது என்பதை ஒவ்வொருமுறையும் உணர்த்தினாய். 

சில நேரங்களில் தோல்வியடையும் போது நீ கண்ணீருடன் அமர்ந்திருக்கும் போது உன் அருகில் அமர்ந்து உன் வலியை உணர்ந்திருக்கிறேன். இன்னும் சிலவற்றை நான் செய்திருக்க வேண்டும் என்று நீ கூறுவதை கேட்டிருக்கிறேன். இதுதான் நீ, இதைத்தான் நீ அனைவரிடமும் எதிர்பார்க்கிறாய்.

 நீ சமரசமற்றவன் , நேர்மையானவன். பாசாங்கு உன் எதிரி அதுதான் என் கண்களுக்கு உன்னை தலைவனாக காட்டியது. ஏனென்றால் நீ தூய்மையானவன், உன் கலப்படமற்ற நோக்கத்தை  எல்லாராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னதை போல இந்த கண்கள் வழியே உன் ஆளுமையை கண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். 

நீ மிகச்சரியானவன் அல்ல, உனக்கும் சறுக்கல்கள் உண்டு ஆனால் அதை எப்படி சரிசெய்கிறாய் என்பதே உனது தனித்தன்மை. நீ சரியானதையே செய்கிறாய், அதற்காக கடுமையாக உழைக்கிறாய். நீ எப்போதும் எதற்காவும் பேராசை பட்டது கிடையாது. எனக்கு தெரியும் இந்த கேப்டன் பதவியும் அப்படிதான். 

ஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அவர்கள் அதோடு தனது எல்லையை சுருக்கி கொள்கிறார்கள் என்று அர்த்தம். நீ என் காதல், நீ எல்லைகளற்றவன். இந்த 7 வருடங்களில் நமது மகள் தந்தை என்னவெல்லாம் கடந்து வந்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். நீ சரியானதையே செய்திருக்கிறாய்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments