Breaking News

உரிமை கோரப்படாத 1,805 வாகனங்களை ஏலம் விடப்பட்டு வருகிறது...

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன. 

இவ்வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து வாகனங்களை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் டாக்டர்.M.சுதாகர், கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டும் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.. 

இந்நிலையில், வாகனத்தை எவரும் உரிமை கோரவில்லை என்பதாலும், தொடர்ந்து காவல்நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, காவல்நிலையங்களில் உள்ள உரிமைக்கோரப்படாத வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் மேற்படி வாகனங்களை ஏலமிட்டு அதன்மூலம் வரும் தொகையினை அரசு கணக்கில் செலுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில் மேற்படி உரிமைகோரப்படாத 1,858 வாகனங்கள் குறித்து 14.12.2021 அரசிதழில்  வெளிடப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்கள் அனைத்தும் கடந்த 26.12.2021 முதல் 03.01.2022 வரை பொதுமக்களின் பார்வைக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காட்சிக்கு உட்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட வாகனங்களை வாகன ஆவணத்துடன் வந்து ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிட்டு பெற்றுக்கொள்ள ஒருவாய்ப்பு காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. 

மேலும், இதுவரை உரிமை கோரப்படாத வாகனங்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் டாக்டர்.சுதாகர், காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களின் உத்திரவின் பேரில் மாவட்ட ஏல குழு உறுப்பினர்களை உறுப்பினர்களான 

1 ) திருமதி.ராஜலட்சுமி, ஒருங்கிணைத்து ஏல் குழு வருவாய் கோட்ட அலுவலர், காஞ்சிபுரம், 

2 ) திருமதி.மகாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ), காஞ்சிபுரம், 

3 ) திரு.கண்ணன், மோட்டர் வாகன ஆய்வாளர், ஸ்ரீபெரும்புதூர்.

 4 ) திரு.மோகன், பொறியாளர், மோட்டர் வாகன பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம். 

5 ) திரு.சுந்தர்ராஜன், தாசில்தார், காஞ்சிபுரம் . மற்றும் 

6) திரு.ஜீலியஸ் சீசர், துணை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் ஆகியோர் அடங்கிய குழு தலைமையில் இன்று ( 04.01.2022 ) காலை 10.00 மணி முதல் ஆயதப்படை பயிற்சி மைதானத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் நோய் தொற்று தொடர்பான அறிவுரைகளை வழங்கி சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து திறந்தநிலை ஏலம் விடப்பட்டு வருகிறது.

No comments

Thank you for your comments