Breaking News

இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் அரசு வழங்கும் 25 ஆயிரம் வழங்க வேண்டி ஆட்சியரிடம் மனு

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 25 ஆயிரம் வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அய்யனேரி கிராமத்தைச் சேர்ந்த ஜி. அன்னம்மாள் க/பெ. கோபி, என்பவர் கூலி தொழிலாளி தம்பதியினருக்கு  ஜி .பிரதி, ஜி. ஆஷிதா என 2 பெண் குழந்தைகள்  உள்ளனர்.

இவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது ஆகையால் தமிழக அரசு வழங்கும் ஒருபெண் குழந்தைக்கு 25 ஆயிரம், இரண்டாவது பெண்குழந்தைக்கு 25 ஆயிரம் மொத்தம் 50 ஆயிரம் வழங்க கோரி  மனுவாக எழுதி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் முறையான ஆவணங்களை சரி செய்து மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று மன வேதனையோடு கூறினார்கள்.

இதுகுறித்த, இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுவாக எழுதி கொடுத்துள்ளார்கள் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து அந்த ஏழை குடும்ப தம்பதியர்களுக்கு உதவி செய்வாரா என்று அந்தகுடும்பத்தார் ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.

No comments

Thank you for your comments