69 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு, ஜன.12-
ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சீரிய நடவடிக்கையால் ரூ.6,98,500/- மதிப்புள்ள 69 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பட்டது..... பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்போன்கள் தொலைந்தது, சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்பட்ட பிரச்சனைகள், வங்கிகளின் வாடிக்கையாளர்களிடம் பணம் மோசடி ஆகியவை குறித்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் செல்போன் தொலைந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட நபர்கள் வசம் மேற்படி தொலைந்து போன செல்போன் சம்மந்தமான அனைத்து விபரங்களையும் சேகரித்து, செல்போன் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளியில் நேற்று (11.01.2022) சுமார் ரூ.6,98,500/- மதிப்புள்ள 69 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments
Thank you for your comments